கண்டதும்! கொண்டதும்!

couple kiss man Sunset-romantic-couple-love-wallpaper-HD - The Trent

எட்டடி தொலைவில் அவனது கர்வம்
நான்கடி தொலைவில் அவனது உருவம்
இரண்டடி தொலைவில் அவனது மூச்சுக்காற்று

ஐம்புலன்களும் இயல்புநிலை திரும்பவில்லையே
வெட்கம் கூட அவள் சொல்லை கேட்கவில்லையே

தடுமாறிய இருதயக்கரை உள்வாங்க தொடங்கியதோ
தடம் மாறிய குருதி திசை தேடி அலைந்ததோ

முன்னும் பின்னும் மேலும் கீழும்
அவளை சுற்றிலும் காதல் கீர்த்தனை!
அவனை முற்றிலும் காதல் செய்தனை!