கணவருடன் மகிழ்ச்சியான நாளை நினைவு கூர்ந்த சமந்தா – குவியும் வாழ்த்துக்கள்.

Samantha – Naga Chaitanya Rumor! | NETTV4U

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் திகதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.

8 வருட காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்த்து வரும் இவர்கள் திருமணத்திற்கு பிறகும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி அடுத்தடுத்து புது படங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தனது மூன்றாவது திருமண நாளை சமந்தா இன்று கொண்டாடுகிறார். கணவர் நாக சைதன்யாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு ” நீங்கள் என்னுடையவர் , நான் உங்களுடையவள், நாம் எந்த கதவுக்கு வந்தாலும் அதை ஒன்றாக திறப்போம்.ஹேப்பி anniversary கணவரே” என அழகான கேப்ஷன் கொடுத்து வாழ்த்துக்களை பெற்று வருகிறார்.