கட்சி மாற நினைக்கிறாரா நடிகை குஸ்பு?

சென்னை: புதிய கல்வி கொள்கை பற்றி டிவிட்டரில் கருத்து தெரிவித்த குஷ்பு, ‘இது வரவேற்கத்தக்க நகர்வு’ என ஆதரவு தெரிவித்திருந்தார்.

குஷ்பு தற்போது காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார். புதிய கல்வி கொள்கையை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

இந்நிலையில் இதை குஷ்பு ஆதரிப்பதால் அவருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து தனது கருத்து குறித்து மீண்டும் டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார் குஷ்பு. ‘கட்சியின் நிலைப்பாட்டிலிருந்து எனது கருத்து மாறுபடுகிறது. ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கேட்கிறேன். நான் தலையை ஆட்டும் ரோபோ அல்லது கைப்பாவையாக இருப்பதை விட உண்மையை பேசுகிறேன். எந்தவொரு மசோதா அல்லது வரைவு குறித்து வேறுபட்ட கருத்துக்கள் இருக்கும்.

நான் ஜனநாயகத்தை முழுமையாக நம்பும் நபராக இருக்கிறேன். கருத்து வேறுபாடு இருப்பது நல்லது’ என அவர் தெரிவித்துள்ளார்.

குஷ்புவின் இந்த விளக்கம் காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவன் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தவரை கட்சியில் குஷ்பு துடிப்புடன் செயல்பட்டார்.

கே.எஸ்.அழகிரி வந்தபின் கட்சி செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கிக்கொண்டார்.

குஷ்புவை ஓரங்கட்டுவதாகவும் புகார்கள் வந்தன. இதனால் அவர் பாஜவுக்கு தாவ உள்ளதாக செய்திகள் அடிபட்டன. அதை வலுப்படுத்துவது போல, புதிய கல்விக்கொள்கைக்கு ஆதரவுக் குரல் கொடுத்திருக்கிறார் குஷ்பு….