கட்சி தேர்தலுக்காக விக்கினேஸ்வரன் செலவிட்ட தொகை குறித்த கணக்கறிக்கை வெளியானது!

தமிழ் மக்கள் கூட்டணியினர் தமது தேர்தல் கணக்கறிக்கையை வெளியிட்டுள்ளனர்.இதன்படி அந்தக் கட்சி சுமார் 88 இலட்சம் ரூபாவை தேர்தல் செலவாகக் குறிப்பிட்டுள்ளது.14.5 இலட்சம் ரூபா உள்நாட்டிலிருந்தும், 73.6 இலட்சம் ரூபா வெளிநாட்டிலிருந்தும் நிதியுதவியாக கிடைத்துள்ளதாக அந்த கணக்கறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.