கடும் சவால் நிறைந்த பிக்பாஸ் சீசன் – 4 ???

Bigg Boss Tamil 2 | Big Brother Wiki | Fandom

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் தாக்கல் இந்தியாவிலும் அதிகரித்துள்ளதால் வரும் ஜூலை மாதம் 31 வரை சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜுன் மாதம் 19 ஆம் தேதி சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.

இனிமேல் சினிமா பட ஷூட்டிங் எப்போது நடக்குமென்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

திரையரங்குகளும் திறக்கப்படாததால் பல படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. எனவே வெப்சீரிஸில் முன்னணி நடிகர்கள் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 3 வருடங்களாக மக்களின் ஆதரவைப்பெற்று பெரும் பொழுது போக்கு அம்சமாக இருந்த
பிக் பாஸ் சீசன் – 4 நிகழ்ச்சி தற்போது நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொரொனா காலமாக இருப்பதால் இதில் அதிக எண்ணிக்கைலானவர்கள் பணியாற்றவேண்டிய தேவை உள்ளதால் தற்போது இதன் படப்பிடிப்புகள் நடத்துவதில் சாத்தியம் இருக்காது என தகவல்கள் வெளியாகிறது.

அதேசமயம் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் இந்தியன் -2, தலைவன் இருக்கிறான், அவர் ரஜினியை வைத்து தயாரிக்கும் படங்கள் எல்லாம் நிலுவையில் உள்ளதால் இந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சி நடக்குமா என்ற கேள்விகள் வெளியான நிலையில், வரும் செப்டம்பர் மாதம் பிக்பாஸ் சீசன் 4 நடக்கும் என்ற தகவல் வெளியானது.

இதில், பிக் பாஸ் போட்டியாளர்களாக அதுல்யா, ரம்யா பாண்டியன் கிரண் , நடிகர் இர்பான், ஆகியோர் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.