கடற்படைக்கு சொந்தமான கிளைடர் விமானம் விபத்து: கடற்படை அதிகாரிகள் 2 பேர் பலி

கேரள மாநிலம் கொச்சியில் ஐ.என்.எஸ் கடற்படைக்கு சொந்தமான கிளைடர் விமானத்தில் கடற்படை அதிகாரியான பீகாரை சேர்ந்த சுனில் குமார்.மற்றும் டோராடூனை சேர்ந்த ராஜிவ் ஜா ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த விமானம்  தோப்பன்பொடி பாலம் என்னுமிடத்தின் அருகே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், விமானத்தில் இருந்த இருவரையும் மீட்டு கடற்படைக்கு சொந்தமான மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விபத்து குறித்து தனி குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போல், கேரள மாநில போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.