கடற்கரையில் காதலனுடன் பிகினி டான்ஸ் ஆடிய டாப்ஸி – வைரல் வீடியோ!

Taapsee Pannu Makes Hilarious Video On Viral 'biggini Shoot' Track,  Boyfriend Mathias Boe Makes Cameo - Bollywood |

தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான டாப்ஸி, அதன் பின் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்துவிட்டு இந்தியில் நடிக்க தொடங்கினார். அங்கே அமிதாப்புடன் அவர் நடித்த பிங்க் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார்.

கடைசியாக அவர் நடித்த தப்பாட் திரைப்படம் மிகப் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்று வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. இதையடுத்து டாப்ஸி பாலிவுட் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகையாக வளம் வந்துகொண்டிருக்கிறார்.

தற்போது கொரோனா ஊரடங்கு நேரத்தில் படப்பிடிப்புகள் ஏதுமில்லாததால் டாப்ஸி தொடர்ந்து வித்தியாசமான இடங்களுக்கு ட்ரிப் அடித்து வருகிறார். அவ்வப்போது அழகழகான புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது மாலத்தீவு கடற்கரையில் தனது காதலனுடன் கவர்ச்சி நடனமாடிய வீடியோவை பிகினி ஷூட் என கேப்ஷன் கொடுத்து வெளியிட்டு வைரலாக்கி உள்ளார். இதோ அந்த வீடியோ..