கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி கிராம அலுவலகர் பொலிஸில் முறைப்பாடு

வவுனியா வடக்கு கிராம அலுவலகரின் செயற்பாடுகளுக்கு இடையூறு  ஏற்படுத்தப்படும் உரையாடலை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்து நேற்று கிராம அலுவலகர் ஒருவரினால் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிராம சேவகர் தெரிவித்துள்ளனர் .
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில் , 
கடந்த செவ்வாய்க்கிழமை 31.08 மாலை வவுனியா வடக்கு பரசன்குளம் பகுதியில் மழையுடன் காற்று வீசியது இதன்போது கிராம அலுவலகருடன் இடம்பெற்ற உரையாடல் ஒன்று எவ்வாறாக வெளியே சென்றது. தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கையாகவும் இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு தனது கடமைகளைத் தொடர்ந்து மேற்கொள்ள முடியவில்லை . 
இவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவித்து கிராம அலுவலகர் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார் .