கடந்த 8 மாதங்களுக்குப் பிறகு, ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவியில் குளிக்க நேற்று முன்தினம் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. அனுமதியை தொடர்ந்து 8 மாதங்களுக்குப் பின் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை தந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த வாகனம் மூலம்  ஒகேனக்கல்  வந்திருந்தனர். முன்னதாக, சுற்றுலா பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோத செய்யப்படுகிறது. அதன்பிறகே ஒகேனக்கல் பகுதியில் அனுமதிக்கப்படுகின்றனர். சுற்றுலா பயணிகள் மெயின் அருவிகளில் குளித்தும், பரிசலில் பயணம் செய்தும் உற்சாகம் அடைந்தனர். இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது.