கஞ்சா செடிகளுடன் துப்பாக்கியும் வைத்திருந்த நபர் வவுனியா தலைமை பொலிஸ்நிலைய குற்றத்தடுப்பு பொலீசாரால் கைது

இன்று வவுனியாவில் தலைமை பொலிஸ்நிலைய குற்றத்தடுப்பு பொலீசார் மேற்கொண்ட தேடுதலில்   6அடி நீளமான நான்கு கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்,  மற்றும்  இடியன் துவக்கு  ஒன்றும் மீட்கப்படுள்ளது.

பொலீசாருக்கு கிடைத்த ஒரு தகவலின் படி  வவுனியா முருகனூர் பகுதியில் உள்ள காணி ஒன்றில் தேடுதலை மேற்கொண்ட பொலீசார் அங்கு  கஞ்சா செடி இருப்பதாக பொலீசாருக்கு கிடைத்த தகவலிற்கமைய அப்பகுதியில் தேடுதல் மேற்கொண்ட பொலீசார் தோட்டத்திற்குள் மறைத்து செய்கைபண்ணப்பட்டிருந்த 6 அடி நீளமுடைய நான்கு கஞ்சா செடிகளை மீட்டுள்ளதுடன், மறைத்துவைக்கப்பட்டிருந்த சட்டவிரோத துப்பாக்கி ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்

இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் 42 வயது மதிக்கதக்க  ஒருவரையும் பொலீசார்  கைதுசெய்துள்ளனர்

குறித்த இந்த நடவடிக்கை வவுனியா தலைமை பொலிஸ்நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் பிரணீத் திசாநாயக்க தலைமையில், சாயன்களான விக்கரமசூரிய,நிசாந்த கான்ஸ்டபிள்களான உபாலி,சமீர,தயாளன்,ரணசிங்க ஆகியோரை கொண்டு பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் நாளைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவர் என்று பொலீசார் தெரிவித்தனர்.