ஓவரா கலாய்க்கிறாங்க… சுயசரிதை எழுதும் திட்டத்தைக் கைவிட்ட நடிகர்!

Saif Ali Khan Upcoming Movies List 2020-2022

தன்னுடைய சுயசரிதையை எழுதும் முடிவில் இருந்த சாயிப் அலிகான் அதைக் கைவிடப்போவதாக அறிவித்துள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் சாயிப் அலிகானும் ஒருவர். இவர் 1993 ஆம் ஆண்டு பாலிவுட்டில் பரம்பரா படத்தின் மூலம் அறிமுகமானார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மன்சூர் அலிகான் பட்டோடி மற்றும் நடிகர் ஷர்மிளா தாக்கூர் ஆகிய நட்சத்திர ஜோடியின் மகனான சாயிப் அலிகான் மிகவும் எளிதாக பாலிவுட்டில் கால்பதித்தார். ஆனால் சமீபகாலமாக பாலிவுட்டில் வாரிசு அரசியல் பற்றி விமர்சனங்கள் எழுந்த நிலையில் தானும் அதனால் பாதிக்கப்பட்டதாக சொன்னது கேலிக்கு உள்ளானது. அதுகுறித்து ரசிகர்கள் சாயிப் அலிகானை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில் இப்போது தனது சுயசரிதை எழுதும் முடிவை சாயிப் அலிகான் கைவிடும் முடிவில் இருப்பதாக சொல்லியுள்ளார். இதுகுறித்து அவர் ‘சுயசரிதை எழுத வேண்டுமென்றால் நிறைய மெனக்கிட வேண்டும். அது போல 100 சதவீதம் உண்மையாக இருக்கவேண்டும். அதனால் நிறைய பேர் பாதிக்கப்படலாம். அது வெளியான பின்னர் என்னை நோக்கி வரும் விமர்சனங்களை என்னால் எதிர்கொள்ள முடியுமா என தெரியவில்லை. தற்போது இந்திய ரசிகர்களில் ஒரு பிரிவினர் மிகவும் எதிர்மறை எண்ணங்களைக் கொண்டுள்ளனர். அவர்களுடன் எனது வாழ்க்கையைப் பற்றிப் பகிர்ந்து கொள்ள நான் விரும்பவில்லை.’ எனக் கூறியுள்ளார்.