ஓகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீடிப்பு!

இந்தியாவின் மேற்கு வங்கத்தில் ஓகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாகவும் அதே நேரத்தில் வாரத்தில் இரு நாட்கள் முழு பொதுமுடக்கம் இருக்கும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் வருகிற ஜூலை 31 ஆம் திகதியுடன் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் முடிவுக்கு வரவுள்ளது.

இந்நிலையில்இ ஓகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாகவும அதேநேரத்தில் வாரத்தில் இரு நாள்கள் மட்டும் முழு பொதுமுடக்கம் என்ற தற்போதைய நடைமுறை தொடரும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஓகஸ்ட் பக்ரீத் பண்டிகை அன்று பொதுமுடக்கம் இருக்காது என்று கூறிய அவர் பாடசாலைகள், கல்லூரிகள் ஓகஸ்ட் 31 வரை திறக்கப்படாது என்றும் சூழ்நிலையைப் பொறுத்து செப்டம்பர் 5 ஆம் திகதி மீண்டும் திறக்க முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், அத்தியாவசியத் தேவைகள் தவிர மாநிலத்தில் அரச மற்றும் தனியார் அலுவலங்கள் இயங்காது. அரசு மற்றும் தனியார் போக்குவரத்துக்கான தடை தொடரும். உள்நாட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.