ஒரே நாளில் 7பேருக்கு இலங்கையில் கொரோனா!- மக்களுக்கும் முக்கிய அறிவிப்பு அரசாங்கம் விடுத்துள்ளது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3395 ஆக அதிகரித்துள்ளது.நேற்று (03) மாத்திரம், 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றிற்கு உள்ளாகியிருந்த  மேலும் 9 பேர் நேற்று குணமடைந்து  வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3254 ஆக அதிகரித்துள்ளது.மேலும், கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 128 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.இதேவேளை சுகாதார நடைமுறைமுறைகளை பின்பற்றுமாறு தொடர்ந்து மக்களுக்கு, அரசாங்கம் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.