ஒரே சமயத்தில் இரண்டு ஸ்கிரீன்

எல்ஜி நிறுவனம் இரட்டை ஸ்கிரீன் கொண்ட விங் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் P-OLED ஃபுல்விஷன் ஸ்கிரீன், 3.9 இன்ச் FHD+ இரண்டாவது ஸ்கிரீன் சுழலும் வசதியுடன் வழங்கப்படுகிறது. இதனால் ஒரே சமயத்தில் இரண்டு ஸ்கிரீன்களையும் பயன்படுத்த முடியும்.

இரண்டு ஸ்கிரீன் கொண்ட விங் ஸ்மார்ட்போன் உறுதித்தன்மையை எல்ஜி சுமார் 2 லட்சம் முறை சோதனை செய்ததாக தெரிவித்து இருக்கிறது. இதன் மல்டி ஆப் மோட் கொண்டு இரு செயலிகளை ஒவ்வொரு திரையில் ஒரே சமயத்தில் பயன்படுத்த முடியும்.

எல்ஜி விங் சிறப்பம்சங்கள்

  • 6.8 இன்ச் 2440×1080 பிக்சல் FHD+ 20.5: 9 P-OLED டிஸ்ப்ளே
  • 3.9 இன்ச் 1240×1080 பிக்சல் 1.15:1 G-OLED இரண்டாவது ஸ்கிரீன்
  • ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்
  • அட்ரினோ 620 ஜிபியு
  • 8 ஜிபி ரேம்
  • 128 ஜிபி / 256 ஜிபி மெமரி
  • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • ஆண்ட்ராய்டு 10
  • 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8, OIS
  • 13 எம்பி 117° அல்ட்ரா வைடு லென்ஸ், f/1.9
  • 12 எம்பி 120° அல்ட்ரா வைடு கிம்பல் மோட் கேமரா, f/2.2
  • 32 எம்பி பாப்-அப் செல்ஃபி கேமரா, f/1.9
  • இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
  • யுஎஸ்பி டைப் சி ஆடியோ
  • 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
  • யுஎஸ்பி டைப்-சி
  • 4000 எம்ஏஹெச் பேட்டரி
  • குவிக் சார்ஜ் 4.0
  • 25 ஃபாஸ்ட் சார்ஜிங்

எல்ஜி விங் ஸ்மார்ட்போன் அரோரா கிரே மற்றும் இல்யூஷன் ஸ்கை நிறங்களில் கிடைக்கிறது. முதற்கட்டமாக இதன் விற்பனை தென் கொரியாவில் ஆரம்பமாகி அதன் பின் அக்டோபர் மாதம் வட கொரியா மற்றும் ஐரோப்பாவில் வெளியாகிறது.