ஒரேநாளில் 6000 பேருக்கு கொரோனா தொற்று தமிழகத்தில் கண்டறிவு

கடந்த 24 மணிநேரத்தில் 5995 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 367430ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், சென்னையில் ஒரேநாளில் 1282 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் ஒரேநாளில் 101 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை மொத்தமாக ஆறாயிரத்து 340 பேர் மரணித்துள்ளனர்.

இதேவேளை, ஐயாயிரத்து 764 பேர் குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ளதுடன் மொத்தமாக மூன்று இலட்சத்து ஏழாயிரத்து 677பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் 53ஆயிரத்து 413 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது,

இதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் 72 ஆயிரத்து 423 தனிநபர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 39 இலட்சத்து 23ஆயிரத்து 834 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.