ஒரேநாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒரேநாளில் மாத்திரம் புதிய உச்சமாக ஆயிரத்து 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 44 ஆயிரத்து 466 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 62 ஆயிரத்து 117 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 22 இலட்சத்து 14 ஆயிரத்து 137 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 15 இலட்சத்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 6 இலட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.