ஒரு வருடத்தில் 92% உயர்ந்த உருளைக்கிழங்கின் விலை… மக்கள் அவதி!

கொரோனா பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ளது. அதனால் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சமையலில் தினமும் பயன்படுத்தப்படும் வெங்காயம் உள்ளிட்டவைகளின் விலையும் உயர்வை சந்தித்துள்ளதால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக உருளைக்கிழங்கின் விலை நீண்ட மாதங்களுக்கு பிறகு அதிகரித்துள்ளது. 

அதாவது உருளைக்கிழங்கின் விலை ஒரு வருடத்தில் 92% உயர்வை சந்தித்துள்ளது. கடந்த 130 மாதங்களை ஒப்பிடும்போது, இதுதான் மிக அதிகமாக விலை உயர்வாக பார்க்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் வெங்காயத்தின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. வெங்காயத்தின் விலை 44% அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்திய அளவில் வெங்காயம் ரூ.100 வரையிலும், உருளைக்கிழங்கு ரூ. 45 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி நெருங்கும் நேரத்தில், காய்கறிகள் மட்டுமல்லாமல் பருப்பு வகைகளின் விலையும் அதிகரிக்கிறது. ஊரடங்கு மற்றும் இந்த ஆண்டு குறைவான உணவுப் பொருட்களை மட்டுமே சேமித்து வைத்திருந்தது உள்ளிட்டவைகளே இந்த நிலைக்கான காரணங்களாக இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக 2010ம் ஆண்டில்தான் உருளைக்கிழங்கு விலை அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.