ஒரு மணி நேரம் பெய்த மழையிலேயே தமிழகத்தின் தலை தள்ளாடுகிறது-மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாகவே சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்  நேற்று மாலை சென்னையில் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளிலும் தாம்புரம், முடிச்சூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். 

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஒரு மணி நேர மழை. தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை. வடகிழக்குப் பருவமழை வரட்டுமா? என்று மிரட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார். கருணை மழையைச் சேகரிக்க நீர் நிலைகள் தயார் செய்யப்படவில்லை? எனவும், கடந்த வெள்ளத்தில் கற்ற பாடமென ஏதுமில்லை?. வடிகால்கள் வாரப்படவில்லை? எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். குழந்தைகள் மருத்துவமனையிலும் நீர் புகுவது குறையவில்லை என்றும், ட்விட்டரில் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.