ஒரு நாளைக்கு அதிகபட்சமாக எவ்வளவு காஃபி குடிக்கலாம்..?

ஒரு நாளைக்கு 6 கப் அதற்கு மேல் என காஃபி குடித்தால் 22% மாரடைப்பு, இதய பாதிப்புகள் உண்டாகும்.

Coffee - Wikipedia

பலருடைய டென்ஷனைக் குறைப்பதில் காஃபி முக்கிய பங்கு வகிக்கிறது. இது அந்த நேரத்தில் உங்கள் மனதை ரிலாக்ஸாக்கலாம். ஆனால், மெல்ல மெல்ல உடல் நலனை பாதித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

தற்போது பலரும் வீட்டில் அலுவலகப் பணி செய்வதால் கணக்கே இல்லாமல் நிறைய காஃபி குடிப்பதாகவும், இதனால் வேலையை தொடர்ந்து செய்ய ரெஃப்ரெஷாக இருப்பதாகவும் கூறியுள்ளனர். காஃபியை அளவாக எடுத்துக்கொண்டால் உடல் நலத்திற்கு நல்லது.

Chandigarh is waking up to Dalgona coffee, the favoured isolation beverage  | Lifestyle News,The Indian Express

அதுவே அதற்கு அடிமையாக குடித்தால் எண்ணற்ற பிரச்னைகளை சந்திப்பீர்கள். குறிப்பாக தூக்கமின்மை, இரத்த அழுத்தம், மனப்பதட்டம், செரிமானப் பிரச்சனை, உடல் சோர்வு போன்ற பல பிரச்சனைகளை உண்டாக்கும்.

எனவே ஒருநாளைக்கு 100 மில்லிகிராம் அளவில்தான் காஃபி அருந்த வேண்டும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதோடு ஒரு நாளைக்கு 6 கப் அதற்கு மேல் என குடித்தால் 22% மாரடைப்பு, இதய பாதிப்புகள் உண்டாகும் என Americal Journal of Clinical Nutrition இதழ் வெளியிட்டுள்ளது.

Coffee Culture

அதேபோல் 400 மில்லிகிராம் என அது அதிகரித்தால் 10 கேன் கொக்ககோலா, ஸ்பிரைட் , சோடா என குடித்ததற்கு சமம் என்கின்றனர். எனவே இனியாவது அதன் வீரியத்தை புரிந்துகொள்வது அவசியம்.