”ஒன்லைன் விளையாட்டை தடை செய்ய வேண்டும்”- மத்திய அரசுக்கு ஆந்திர முதல்வர் கடிதம்!

ஒன்லைன் விளையாட்டுகள் அதிகரித்ததையடுத்து, அதனை பயன்படுத்தி சூதாட்டமும் அதிக அளவில் உயர்ந்து வருகிறது. இதனால் ஏற்படும் மன உளைச்சலில் உயிரிழப்புகள் ஏற்படுவதும் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் ஆந்திரபிரதேசத்தில் ஒன்லைன் விளையாட்டு, சூதாட்டம் உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்க இணைய சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடுமாறு, மத்திய அரசுக்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். 

இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘ஒன்லைன் கேம் மற்றும் சூதாட்டம் சமூகத்திற்கு தீங்கு விளைவ்க்கும் செயல். ஒன்லைன் விளையாட்டுகளை பயன்படுத்தி இளைஞர்கள் வீட்டில் இருந்தபடியே சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஆன்லைன் மூலமாக இந்த தவறுகள் நடப்பதால், அதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

மாநில சட்டத்தின் கீழ், இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். இணையதள நிறுவனங்கள் ஒன்லைன் சூதாட்டத்தை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.