ஒன்டாரியோவில் சனிக்கிழமை கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

வியாழக்கிழமை 1038 பேருக்கும் வெள்ளிக்கிழமை 1150 பேருக்கும் புதிதாக கோவிட் வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் ஒன்டாரியோவில் சனிக்கிழமை கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1128 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இன்று கொரோனா வைரஸ் தொற்றால் 28 பேர் உயிரிழந்த நிலையில் ஒன்டாரியோவில் கோவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6848 ஆக அதிகரித்துள்ளது.அத்துடன் ஒன்டாரியோ வைத்தியசாலைகளில் 699 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் 313 பேர் இன்று குணமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஒன்டாரியோவில் கோவிட் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 274714 ஆக அதிகரித்துள்ளது.