ஒண்டாரியோ வரவு செலவு திட்டம் நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்டது

ஒன்ராறியோவின் ஆண்டு வரவு செலவுத் திட்டம் COVID-19 தொற்றுநோயால் கிட்டத்தட்ட 8 மாதங்கள் கழித்து ஒன்ராறியோ அரசாங்கம் வியாழக்கிழமை தனது சமீபத்திய வரவுசெலவுத் திட்டத்தை வெளியிட்டது, Covid -19 தொற்று பரவல் காரணமாக ஏற்பட்ட  அதிக  பற்றாக்குறையை உள்ளடக்கியதாகவும் , மாகாணத்தின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் திட்டங்களை உள்ளடக்கியதகவும் இருந்தது

வரவு செலவு திட்டத்தின் நிதி நிலைப்படி இந்த ஆண்டு மொத்த செலவீனமாக 187 பில்லியன் டொலர்களும் பற்றாக்குறையாக  38.5 பில்லியன் டொலர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது

அடுத்த வருட வரவு செலவு திட்டம் ஒரு சமநிலையான வரவு செலவு திட்டமாக இருக்கும் என்றும் ,இந்த வருடம் வழமை போல் சமநிலையான ஒரு வரவு செலவு திட்டமாக இருக்காது என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டது

“உலகப் பொருளாதாரத்தில் இன்னும் பெரிய நிச்சயமற்ற தன்மை உள்ளது, இது ஒன்ராறியோ வரவுசெலவுத் திட்டத்திற்கும் குடும்பம் மற்றும் வணிக வரவு செலவுத் திட்டங்களுக்கும் பொருந்தும்” என்று ஒண்டாரியோ நிதியமைச்சர் Rod Phillips  கூறினார்.