ஒண்டாரியோ மாகாண வரவு செலவு திட்டம் இன்று சமர்ப்பிக்கப்படுகிறது

ஒண்டாரியோ  மாகாண அரசு covid -19 தொற்று பரவலின் பின்பு முதல் முறையாக இன்று தனது   வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க இருக்கின்றது இந்த வரவு செலவு திட்டமானது Covid -19  காலகட்டத்தில் அரசாங்கம் செலவிட்ட செலவினங்களை எந்த வழிகளில்  மீட்பதற்கான அடுத்த நடவடிக்கைகள் இந்த வரவு செலவு திட்டத்தில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த வரவு செலவு திட்டத்தில் COVID-19  பரவலின் அடுத்த கட்ட விவரங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என மாகாண அரசு தெரிவித்து இருக்கின்றது

இதன் படி இந்த வார தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட நீண்டகால பராமரிப்புக்கான புதிய தரமும் இதில் அடங்கும்  இதன் மூலம் ,  நீண்டகால பராமரிப்பு நிலையங்களில் இருப்பவர்கள் ஒவ்வொரு நாளும் சராசரியாக நான்கு மணிநேர நேரடி கவனிப்பைப் பெறுவார்கள்.

உலகளாவிய சுகாதார நெருக்கடியால் ஏற்பட்ட பொருளாதார நிச்சயமற்ற தன்மையைக் காரணம் காட்டி இந்த ஆண்டு தொடக்கத்தில் மாகாண அரசு ஒரு முழு நிதித் திட்டத்தை வழங்குவதை நிறுத்தி வைத்தனர்.

அதற்கு பதிலாக மார்ச் மாதத்தில் மாகாண அரசு Covid -19 உதவி திட்டத்தின் அடிப்படையில்    ஆரம்பத்தில்  17 பில்லியன் ஆக இருந்த உதவி தொகை   2020-21 ஆம் ஆண்டின் இறுதியில் 30 பில்லியன் டாலராக அதிகரிக்கப்பட்டது

இந்த மாகாணம் முதலில் 20.5 பில்லியன் டாலர் பற்றாக்குறையை முன்னறிவித்தது, பின்னர் கூடுதல் செலவு காரணமாக 38.5 பில்லியன் டாலராக உயர்த்தப்பட்டது.