ஒண்டாரியோ மாகாண அரசாங்கம் 60 மருந்தகங்களில் COVID-19 சோதனையை விரிவுபடுத்துகிறது

ஒண்டாரியோ மாகாண அரசாங்கம் 60 மருந்தகங்களில் COVID-19 சோதனையை விரிவுபடுத்துகிறது. Ford  அரசாங்கம் COVID-19 சோதனையின் முக்கிய விரிவாக்கத்தை அறிவித்தது, இது இப்போது மாகாணத்தில் உள்ள பல மருந்தகங்களில் நடத்தப்படும்.

அரசாங்க அதிகாரிகள் கூறுகையில், வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ஒன்ராறியோவில் 60 மருந்தகங்கள் வரை நியமனம் மூலம் மட்டுமே பரிசோதனையைத் தொடங்கும், மேலும் வரும் வாரங்களில் புதிய பரிசோதனை இடங்கள் இணையத்தளம் மூலம் அறியத்தரப்படும் என்றும். இந்த முயற்சி மாகாணத்தின் 150  சோதனை   மையங்களுக்கு அப்பால் சோதனை திறனை விரிவாக்கும் என்று அரசாங்கம் கருதுவதாக தெரிவித்தார்கள்

மாகாணத்தில் அதிகமான மக்களுக்கு சோதனையை விரிவுபடுத்த   பல வழிகளிலும் உதவிய  Shoppers Drug Mart, Rexall, சுயாதீன மருந்தகங்களுக்கு தான் நன்றி சொல்வதாக ஒண்டாரியோ மாகாண முதல்வர் தெரிவித்தார்

எல்லா மக்களின் ஒத்துழைப்புடன் நாளாந்தம் Covid-19 பரிசோதனைகளை செய்வதன் மூலம் Covid-19 பரவலை  தடுக்கமுடியும் என்றும் மருந்தகங்கள் Covid-19 அறிகுறிகள் இல்லாதவர்களும் பரிசோதனை செய்யலாம் என்றும் மாகாண முதல்வர்  Doug Ford தெரிவித்தார் 

COVID-19 பரவுவதைக் கட்டுப்படுத்த ஒவ்வொருவரும் தங்கள் பங்கைச் செய்யுமாறு  மாகாணம் ‘சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட்  வலியுறுத்தினார்

டொராண்டோவில் உள்ள Mount Sinai உட்பட, ஒன்ராறியோவின் மூன்று மருத்துவமனைகள்  COVID-19 க்கான உமிழ்நீர் பரிசோதனையைத் தொடங்கும் என்றும் மாகாண முதல்வர்  Doug Ford தெரிவித்தார்  .