ஒண்டாரியோ பொது பாடசாலைகளில் COVID-19 தொற்றுகள் அதிகரிப்பு

ஒண்டாரியோ பொது பாடசாலைகளில் 144 புதிய  COVID-19  தொற்றுகள்  பதிவாகியுள்ளன இதை தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களில் மொத்தமாக 932 COVID-19 தொற்றுகள் ஒண்டாரியோ பொது பாடசாலைகளில் பதிவாகியுள்ளன

கடந்த இரண்டு வாரங்களில் பொது பாடசாலைகளில் கடமை புரியும் மேலும் 12 ஊழியர்கள் COVID-19 தொற்றினால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து மொத்தமாக பாதிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 261 ஆக உயர்ந்துள்ளது 

சுகாதார அமைச்சின் தகவலின் படி கடந்த இரண்டு நாட்களாக ஒண்டாரியோவில் எந்தவொரு பாடசாலைகளும்  COVID-19 தொற்று காரணமாக மூடப்படவில்லை என தெரிவித்துள்ளது 

டொராண்டோ பிராந்திய பாடசாலைகள்  வாரியம் தனது இணையதளத்தில் நாள் முழுவதும் தற்போதைய COVID-19 தொற்றுகள் குறித்த தகவல்களை வழங்குகிறது