ஒண்டாரியோவில் Covid-19 பரிசோதனை முறைகளில் புதிய நடை முறை இன்று (Oct06)முதல் அமுல்படுத்தப்படும்

ஒண்டாரியோவில் உள்ள COVID-19 பரிசோதனை நிலையங்கள்  முன் நியமன அடிப்படையில் தான் இனிமேல் செயல்படும் என் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த மாற்றம் இன்றில் இருந்து(Oct 06) நடைமுறைக்கு வருகிறது 

ஒண்டாரியோ COVID-19 இன் இரண்டாவது அலைக்கு மாறிவரும் இந்த நிலையில்  முன் நியமன அடிப்படையில் COVID-19 பரிசோதனை செய்யும் முறை நடைமுறைக்கு வருகிறது 

பரிசோதனை நிலையங்களில் COVID-19 சோதனைகளுக்காக மணிநேரம் மக்கள் காத்திருந்ததாலும் , பலர் திருப்பி அனுப்பப்பட்டதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குளிரான காலநிலை தொடங்க இருப்பதால் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பது அவர்களின் உடல் நலத்துக்கு உகந்தது அல்ல என்று  ஒண்டாரியோ மாகாண முதல்வர்  Doug Ford  செய்தியாளர் மகாநாட்டில் தெரிவித்தார்

மாகாணத்தின் வலைத்தளத்தின்படி, GTA-வில் உள்ள 77 பரிசோதனை நிலையங்கள் தெரிவு செய்யப்பட்ட மருந்தகங்கள் இவற்றில் நியமனம் பெற்று பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்