ஒண்டாரியோவில் நீண்டகால பராமரிப்பு இல்லங்களுக்கான புதிய கட்டுப்பாடுகள்

COVID-19 தொற்றுகள் வேகமாக பரவி வரும் இடங்களான Toronto ,Peel Ottawa பகுதிகளில் உள்ள  நீண்டகால பராமரிப்பு இல்ல குடியிருப்பாளர்கள்  இன்று வெள்ளிக்கிழமை முதல் சமூக அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஒண்டாரியோ மாகாண அரசு அறிவித்துள்ளது 

புதிய கட்டுப்பாடுகள் டொராண்டோ, பீல் மற்றும் ஒட்டாவாவில் உள்ள நீண்டகால பராமரிப்பு இல்லங்களுக்கு பொருந்தும் இந்த புதிய கட்டுப்பாடுகள் மறு அறிவித்தல் வரை நடைமுறையில் இருக்கும்

.மருத்துவ அல்லது இரக்க காரணங்களுக்காக குறுகிய கால மற்றும் தற்காலிகமாக வெளியில் செல்வது அனுமதிக்கப்படும்.