ஒண்டாரியோவில் நாளை அதிகாலை முதல் நேர மாற்றம் அமுலுக்கு வருகின்றது

ஒண்டாரியோவில் நாளை முதல் பகல் நேரத்தை மிச்சப்படுத்தும் நோக்கில் கடிகாரங்கள் ஒருமணி நேரத்திற்கு பின்னால் வைக்கும் வழமையான நடைமுறை இந்த வருடத்துடன் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த மாற்றம் நாளை அதிகாலை 2 மணிமுதல் கடிகாரங்கள் 1 மணி நேரம் குறைத்து வைக்கப்படும்.

ஒண்டாரியோ மாகாண முதல்வர் Doug  Ford அரசாங்கத்தால் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மசோதாவின் படி இது ஒருவருடத்தில் வரும் இரு ஆண்டு கடிகார மாற்றங்களை முடிவுக்குக்கொண்டு வரும்  திட்டத்தை கைவிட்டு எப்போதும் பகல் நேர கடிகார முறையினை பின்பற்ற வேண்டும் என்ற ஒரு கோரிக்கையினை முன்வைத்து இருந்தது.

ஆனால் இந்த மாற்றம் கியூபெக் மற்றும் அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம் இதே போன்ற சட்டத்தைத் தொடரும் வரை இந்த மாற்றம் ஏற்படாது.இந்த நேர மாற்றத்தினால் வரும் வீதி விபத்துகளை கட்டுப்படுத்த பொலீசார் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

1918 ஆம் ஆண்டில் ஒன்ராறியோவில் தொடங்கி 100 ஆண்டுகளுக்கும் மேலாக பகல் சேமிப்பு நேரம் உள்ளது.