ஒட்டுமொத்த கல்வி முறையிலும் அடிப்படை மாற்றங்களை உருவாக்குவதற்கு புதிய கல்விக்கொள்கை ஒரு வாய்ப்பாக இருக்கிறது – பிரதமர் நரேந்திர மோடி

மைசூர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழா காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் டெல்லியில் இருந்தபடி பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக மாநில ஆளுநர்,  பல்கலைக்கழகத்தின் நிர்வாகிகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய பிரதமர் மோடி, கடந்தகால மற்றும் எதிர்கால இந்தியாவின் வளமான கல்வி அமைப்பு மையமாக மைசூரு பல்கலைக்கழகம் திகழ்கிறது என தெரிவித்தார். 

2014-ம் ஆண்டு வரை நாட்டில் 9 ஐ.ஐ.டி.க்களே இருந்ததாகவும், கடந்த 5 ஆண்டுகளில் 16 ஐ.ஐ.டி.க்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார். புதிய உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்க கட்டுப்பாடின்றி அனுமதி வழங்கப்படுகிறது என தெரிவித்த பிரதமர், ஒட்டுமொத்த கல்வி முறையிலும் அடிப்படை மாற்றங்களை உருவாக்குவதற்கு புதிய கல்விக்கொள்கை ஒரு வாய்ப்பாக உள்ளது என்றும் தெரிவித்தார்.