ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி முதியவர்கள் மற்றும் இளைஞர்களிடையே நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி முதியவர்கள் மற்றும் இளைஞர்களிடையே நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அறிவித்துள்ளது.மேலும் இந்த தடுப்பூசி, வயதானவர்களிடையே குறைவான பாதகமான எதிர்வினைகளையே ஏற்படுத்தியதாகவும் அறிவித்துள்ளது.கொரோனா தொற்று உலகில் 1.15 மில்லியனுக்கும் அதிகமான மக்களை காவுகொண்டுள்ளதுடன் உலகப் பொருளாதாரத்தை ஆட்டிப்படைத்துள்ளது.

இந்நிலையில் குறித்த தடுப்பூசி வயதான மற்றும் இளையவர்களிடையே நோயெதிர்ப்புத் திறன் பதில்கள் ஒத்திருப்பதைக் காண்பது ஊக்கமளிக்கிறது என்றும் மேலும் வயதானவர்களில் எதிர்வினை குறைவானதாக இருந்தது என்றும் அஸ்ட்ராஜெனெகா ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.அத்தோடு முடிவுகள் மேலும் AZD1222 இன் பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்புத் தன்மைக்கான ஆதாரங்களை உருவாக்குகின்றன என்றும் அவர் அறிவித்துள்ளார்.