ஐ.தே.க தலைமைத்துவம் குறித்து இறுதி தீர்மானம்

இன்று (25) இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைமைத்துவம் குறித்து எவ்வித தீர்மானங்களும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைமைத்துவம் மற்றும் தேசிய பட்டியல் உறுப்பினர் குறித்து இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (25) பிற்பகல் சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, கட்சியின் தலைமைத்துவம் மற்றும் தேசிய பட்டியல் உறுப்பினர் குறித்த கலந்துரையாடப்பட்டுள்ளது.