ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரிக்காத தேர்தல்

பெலாரஸிய ஜனாதிபதி தேர்தல் முடிவை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரிக்கவில்லை என ஐரோப்பிய சபையின் தலைவர் சார்லஸ் மைக்கேல் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்களை விடுவிக்க ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவிடம் அழைப்பு விடுத்தார்.

ஜேர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள், பெலாரஸின் தேர்தல் முடிவை இந்த ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரிக்கவில்லை என்று கூறுகிறார்கள்.

இதனிடையே போலந்து மற்றும் லித்துவேனியா எல்லைகளில் இராணுவ இருப்பை பலப்படுத்த பெலாரஸின் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.

வழிகாட்டப்பட்ட ஏவுகணைப் பிரிவு, விமான எதிர்ப்பு உபகரணங்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் இப்பகுதிக்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பெலாரசிய ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ 10 நாள் வீதி ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய தேர்தல்களால் தூண்டப்பட்ட வேலை நிறுத்தங்களுக்குப் பிறகு தனது கட்டுப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் முயற்சிகளை முடுக்கிவிட்டார்.