ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது!

பக்தர்களின் கோரிக்கையை ஏற்றுச் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. நாளை முதல் 21ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் ஐப்பசி மாத பூஜைகளுக்கு நாளை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.  இந்த 5 நாட்களிலும் தினமும் 250 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.  ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் எப்படி தரிசனம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுவார்கள் என்றும், அதன் படி கொரோனா நிபந்தனைகளைப் பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்ய வேண்டுமென்றும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.