ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று !

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (25) நடைபெறவுள்ளது.

இன்று நடைபெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமொன்று நாளை (26) நடைபெறவுள்ளது.

மேலும் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் இந்த சந்திப்பில் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.