ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமென அக்கட்சியின் பதில் தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவிப்பு

ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமென அக்கட்சியின் பதில் தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தாவில் இன்று (வெள்ளிக்கிழமை) ஐக்கிய தேசியக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட ரவி கருணாநாயக்க பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செயற்குழு கூட்டம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் முக்கிய பதவிகளில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளோம்.

எனவே இந்த கூட்டம் தொடர்பான முழுமையான விபரங்களை எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடுவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.