ஐகூ 5 ப்ரோ பிஎம்டபிள்யூ எடிஷன் டீசர் வெளியீடு

ஐகூ பிராண்டின் புதிய ஐகூ 5 ப்ரோ பிஎம்டபிள்யூ எடிஷன் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.

ஐகூ 5 ப்ரோ பிஎம்டபிள்யூ எடிஷன் டீசர் வெளியீடு

பிஎம்டபிள்யூ எம் மோட்டார்ஸ்போர்ட் உடன் கூட்டணி அமைத்து இருப்பதாக ஐகூ பிராண்டு சமீபத்தில் அறிவித்தது. அந்த வரசையில் ஐகூ 5 ப்ரோ பிஎம்டபிள்யூ எடிஷன் ஸ்மார்ட்போன் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. 

புதிய ஐகூ 5 ப்ரோ பிஎம்டபிள்யூ எடிஷன் கெவ்லர் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதில் 3 பிரைமரி கேமராக்கள் வழங்கப்படுகிறது. மூன்று சென்சார்களில் ஒன்று பெரிஸ்கோப் கேமரா ஆகும். இந்த கேமரா 5எக்ஸ் ஆப்டிக்கல் ஜூம் மற்றும் 60 எக்ஸ் டிஜிட்டல் ஜூம் வழங்கும் திறன் கொண்டது.

ஐகூ நிறுவனம் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட சக்திவாய்ந்த சாதனங்களை உற்பத்தி செய்து வழங்குவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் 120 ஹெர்ட்ஸ் AMOLED ஸ்கிரீன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 5ஜி மொபைல் பிராசஸர், UFS 3.1 ஸ்டோரேஜ் மற்றும் LPDDR5 ரேம் வழங்கப்பட இருக்கிறது.


இத்துடன் ஐகூ 5 சீரிஸ் ஸ்டான்டர்டு வெர்ஷனில் 55 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும், டாப் எண்ட் மாடலில் 120 வாட் அல்ட்ரா ஃபிளாஷ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட உள்ளது. இது ஸ்மார்ட்போனினை 15 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் திறன் கொண்டது ஆகும்.