ஏழு Covid-19 தொற்றுகள் டொரோண்டோ பிராந்தியங்களுக்கு உட்பட பாடசாலைகளில்(TDSB) இருந்து பதிவாகியுள்ளன

ஒண்டாரியோவில் covid -19  தொற்றுகள் பதிவான 27 பாடசாலைகளில் ஏழு தொற்றுகள் டொரோண்டோ  பிராந்தியங்களுக்கு உட்பட பாடசாலைகளில் இருந்து பதிவாகியுள்ளன.

பதிவான  ஏழு தொற்றுகளும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் காணப்பட்டதாக அறியப்படுகிறது  நான்கு தொடக்கப் பாடசாலைகளிலும் , மூன்று உயர்நிலைப் பாடசாலைகளிலும் பதிவாகியுள்ளன

பாதிக்கப்பட்ட பாடசாலைகளாக Earl Haig Secondary School, York Mills Collegiate, and School of Experiential Education. குறிப்பிடப்பட்டுள்ளன

இதில் Earl Haig உயர் நிலை பாடசாலையானது டொரோண்டோ பிராந்திய கல்வி சபையால் வகுப்பு அறைகளின் அளவில் மற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஆலோசனை கூறப்பட்ட பாடசாலையாகும்

இந்த பாடசாலையில் இருந்து 78 வீதமான  மாணவர்கள் வரும் வியாழக்கிழமை மீண்டும் வகுப்பறைகளுக்கு சென்று கல்வியை தொடர இருக்கின்றனர்

ஆரம்ப நிலை பாடசாலைகள் இந்த வருடம் தாமதித்து பாடசாலைகள் நடத்துவதன் அடிப்படியில் வாரத்தில் மூன்று நாட்கள் இயங்க இருக்கின்றன