எஸ்.பி.பி. உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்; மருத்துவமனைக்கு விரைந்தார் கமல்ஹாசன் !

Kamal Haasan visits SP Balasubrahmanyam at MGM hospital in Chennai - Movies  News

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக முன்னேறி வருவதாக அவர் மகன் எஸ் பி சரண் தெரிவித்திருந்த நிலையில், அவர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சமீபத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்துவிட்டதாகவும் அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாகவும் எஸ்பிபி சரண் அவர்கள் தெரிவித்திருந்தார். ஆனால் இன்று மீண்டும் அவர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எஸ்.பிபியின் நண்பரும், நடிகருமான கமல்ஹாசன் அவர் சிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று நிலவரம் குறித்து கேட்டறிகிறார்.