எலிகளால் சிதைக்கப்பட்ட கொரோனாவால் உயிரிழந்தவரின் உடல்: ம.பி மருத்துவமனையில் நிகழ்ந்த பயங்கரம்!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் அரசு சார்பில் கொரோனா மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த 87 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் அவரது உடல் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அங்கு வந்த உறவினர்களிடம் அந்த உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

அப்போது ஒப்படைக்கப்பட்ட உடலில் கண், கால், காது, முகம், உள்ளிட்ட பகுதிகள் சிதைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடன் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் இதற்கு மருத்துவமனை நிர்வாகம் பொறுப்பேற்க மறுத்துவிட்டதால் உறவினர்கள் வாக்குவாததில் ஈடுபட்டனர். 

இதனை அடுத்து குடும்ப உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் இந்தூர் மாவட்ட நிர்வாகம் ஒரு மாஜிஸ்திரேட் அளவிலான விசாரணையைத் தொடங்கியுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள உயிரிழந்த நபரின் மருமகள், வெறும் நான்கு மணி நேரத்தில் எலிகள் எவ்வாறு உடலைக் கடித்தன என்று பாருங்கள். இது அநீதி இது குறித்து எங்களுக்கு சொல்லியிருக்க வேண்டும் என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். 

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல் மருத்துவமனையிலேயே எலிகளால் சிதைக்கப்படும் சம்பவம் தற்போது அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.