என்னில் பாய்ந்திடும் காதலே… சினம் படத்தின் பாடல் ப்ரோமோ வெளியீடு!

Sinam Movie (2021) | Cast | Teaser | Trailer | Release Date - INSIDE THE  MOVIE

அருண் விஜய்யின் தடம் படத்தின் வெற்றி அவர் மீது தமிழ் சினிமாவின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதையடுத்து அவர் வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் மாபியா திரைப்படம் வெளியானது. நீண்டகாலமாக பாக்ஸர் என்ற திரைப்படம் உருவாக்கத்தில் உள்ளது.
அதே போல நவீன் இயக்கத்தில் அக்னி சிறகுகள், அறிவழகன் இயக்கத்தில் பார்டர் மற்றும் தனது மாமா ஹரி இயக்கத்தில் ஒரு படம் என பிசியாக இருக்கிறார். அதில் ஒரு படமாக ஜி என் ஆர் குமாரவேலன் இயக்கத்தில் நடித்து வரும் சினம் திரைப்படம் உள்ளது.

இந்த படத்தின் கதை பிடித்திருந்ததால் அருண் விஜய்யின் தந்தை விஜய்குமாரே தயாரித்துள்ளார். இப்போது அந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில் சென்சாருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அண்மையில் அறிவித்தனர்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் ரிலீஸாக உள்ள நிலையில் அண்மையில் அந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெறும் “என்னில் பாய்ந்திடும் காதலே” என்ற பாடலின் ப்ரோமோ வீடியோ யூடியூபில் வெளியாகி வலம் வந்துகொண்டிருக்கிறது.