என்னவனே…

நீ அருகினில் இருக்கையில், 

அலை மோதும் நெஞ்சம். 

உன் உயரும் புருவங்கள்,

திமிரும் தோள்கள் , 

ஆயிரம் கதைப்பேசும்

இரு விழிகள்,

மயக்கத்தில் 

கிறங்கிப்போகிறது 

என் பெண்மை….!

அயராமல் உன்னை 

ஆராதிக்கும் ஆன்மா..!

தயங்காமல் வியக்க செய்யும் 

உன் எண்ணம் .. 

உடல் முதல் உயிர் வரை

எங்கும் உன் படையெடுப்பு. 

என் இதயம் அதில்

உன் அரசாட்சி….

பல நூறு ஆடவரில் என்னை 

அண்ணார்ந்து பார்க்கவைத்த 

ஆண்மகனே….

உனக்கெனவே பிறந்தேன் .. 

பெண்ணானேன் . . 

ஆனந்தத்தில் 

ஆர்ப்பரிக்கும் என் 

இதயமே சாட்சி 

காதலிக்கிறேன் உன்னை 

அத்தனையும் தாண்டி….