
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள், வரும் 30ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. இந்த நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் வரும் 29ம் தேதி முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.
இந்த ஆலோசனையின் அடிப்படையில், தமிழகத்தில் அமுலில் உள்ள கட்டுப்பாடுகளை தொடருவதா அல்லது தளர்த்துவதா என்பது பற்றி அரசு முடிவெடுக்கும் என கூறப்படுகிறது.