எண்ணற்ற மருத்துவ நன்மைகளை தரும் தூதுவளை !!

தூதுவளை மூலிகை மருத்துவம்! | Netrigun

தூதுவளை ஈரமான பகுதிகளில் புதர் மாதிரி வளர்ந்து காணப்படும். தூதுவளையின் இலை கரும்பச்சை நிறத்திலும் ,பழங்கள் உருண்டை வடிவத்தில் சிவந்த நிறத்திலும் காணப்படும். இதனுடைய பூக்கள் நட்சத்திர வடிவத்தில் ஊதா நிறத்தில் அழகாகக் காணப்படும்.

தூதுவளை கொண்டு ரசம் தயாரித்து, நோய் தாக்கம் ஏற்பட்டவர் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சளி, இருமல், மூக்கடைப்பு, மூச்சிரைப்பு போன்ற பல்வேறு  பிரச்சனைகளிலிருந்து எளிதாகக் குணம் அடைய முடியும்.  

சளி மட்டுமில்லை காய்ச்சலுக்கும் தூதுவளை சிறந்த மருந்து தான். மேலும் உடல் வலிமை அடையும். தொடர்ந்து தூதுவளையை உணவில் சேர்த்துக் கொள்வதன்  மூலம் மூளையில் உள்ள செல்கள் வலிமை அடையும். இதனால் மூப்பு அடைந்த காலத்திலும் நினைவாற்றல் குன்றாமல் இருக்கும். 

இரத்த சோகை பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள தூதுவளை உதவுகிறது. தூதுவளை இலைகளைப் பறித்து, சுத்தம் செய்து, காயவைத்து, பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும் இதனைத் தொடர்ந்து மோரில் கலந்து சாப்பிட்டு வர இரத்த சிவப்பு அணுக்கள் விருத்தி அடைந்து, இரத்த சோகை நோய் தீர்ந்துவிடும். 

தூதுவளையை உணவில் தேவையான அளவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், உடல் வலுவடைந்து நரம்பு சம்பந்த பிரச்சனை நீங்கும். தூதுவளையில் கல்சியம் சத்து அதிகளவு காணப்படுகின்றது.