எடப்பாடி பழனிசாமி சுதந்திரத் தினத்தை முன்னிட்டு வாழ்த்து

இந்தியாவின்  74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினம் குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்தியாவின் 74-வது சுதந்திர திருநாள் நாளை கொண்டாடப்படுகிறது. தமிழகம் முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழ செய்திட மக்கள் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.

மக்களின் ஒத்துழைப்போடு கொரோனா பாதிப்பில் இருந்து தமிழகம் முழுமையாக மீண்டு மீண்டும் வெற்றி நடைபோடும்” எனத் தெரிவித்துள்ளார்.