ஊரடங்கு மறு அறிவித்தல் வரை நீடிப்பு

மேல் மாகாணம் உட்பட பல பகுதிகளில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நாளை 9ஆம் திகதி (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு நீக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் சில மாவட்டங்களின் பொலிஸ் பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரது தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்பதுடன் அவை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதன்படி கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி, மோதரை, புளுமெண்டல், கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், கரையொரப் பொலிஸ் பிரிவு, பாபர் வீதி, மாளிகாவத்தை, தெமட்டகொட, வெல்லம்பிட்டி, வாழைத்தோட்டம், டாம் வீதி மற்றும் பொரளை ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் வத்தளை, பேலியாகொடை, கடவத்தை, றாகம, நீர்கொழும்பு, பமுணுகம, ஜா – எல, சப்புகஸ்கந்த ஆகிய பிரதேசங்களும் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

களுத்துறை மாவட்டத்தின் ஹொரனை, இங்கிரிய ஆகிய பிரதேசங்களும் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, குருணாகல் மாவட்டத்தின் குருணாகல் மாநகர சபை பிரிவு, குளியாப்பிட்டிய, ஆகிய பிரதேசங்களும் கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல, ருவான்வெல்ல ஆகிய பிரதேசங்களும் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.