ஊரடங்குச் சட்டம் பற்றி இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்

மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நாளை அதிகாலை 5 மணியுடன் தளர்த்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் முன்னதாகவே ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட 68 பொலிஸ் பிரிவுகளிலும் தொடர்ந்து ஊரடங்கு அமுலில் இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையைக் கருத்திற்கொண்டு கம்பஹா மாவட்டம் உள்ளிட்ட 68 பொலிஸ் பிரிவுகளில் முன்னதாக ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு முதல் மேல் மாகாணத்திலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.