உள் ஒதுக்கீடு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மு.க ஸ்டாலின் உட்பட திமுகவினர் 3500 மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

மருத்துவபடிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத வழங்கும் சட்ட மசோதவிற்கு அனுமதி அளிக்காத ஆளுநரை கண்டித்து, ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து அனுமதியின்றி போரட்டம் நடத்திய திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட திமுகவினர் மீது கிண்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 4 பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை சார்பில், விவசாயிகளுக்கு டிராக்டர், நடவு செய்யும் இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை, அமைச்சர் சன்முகம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு, ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாகக் கூறினார். ஆனால், இந்த சட்டம் எப்படியும் நிறைவேறும் என்பதை தெரிந்துகொண்டு, மு.க.ஸ்டாலின் நாடகமாடி வருவதாகவும் சண்முகம் விமர்சித்தார். மேலும், மக்களின் நம்பிக்கை குறித்து பேசும்போது கவனமாக இருக்க வேண்டுமென்றும் சிவி சண்முகம் தெரிவித்தார்.