உலக அழகி இங்கே வந்தாலும் அவள ஊற விட்டு ஓட சொல்லுவேன் – கலக்குறீங்க ஆல்யா!

Alya Manasa Wiki, Age, Husband, Boyfriend, Family, Biography & More –  WikiBio

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர்.

கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு மணவாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 20ம் திகதி ஆல்யாவிற்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. மகளுக்கு ‘ஐலா சையத்’ என பெயரிட்டிருக்கும் ஆல்யா அடிக்கடி செல்ல மகளின் அழகிய புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது குழந்தை பிறப்பிற்கு பிறகு மீண்டும் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார். தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால் ஆல்யா ஷூட்டிங் ஸ்பாட்டில் நடனமாடிய வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். குழந்தை பிறந்த பிறகும் குறையாத அழகு ஆல்யா மானசா என வர்ணித்து கமெண்ட் செய்துள்ளனர் நெட்டிசன்ஸ்.