உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு இன்று மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு இன்று மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளில் பிரதம அதிதியாக தபால் சேவைகள் மற்றும் ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ எஸ் .வியாழேந்திரன் கலந்துகொண்டார்.

இன்று காலை 11.30 மணியளவில் புளியந்தீவு மெதடிஸ்த திருச்சபையில் கிறிஸ்தவ மத நிகழ்வில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர், அதனைத் தொடர்ந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இந்து மத வழிபாடுகளிலும் கலந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து கொக்கட்டிச்சோலை தபால் நிலையத்தில் கௌரவ இராஜாங்க அமைச்சர் அவர்கட்குரிய வரவேற்வு நிகழ்வொன்றும் இடம் பெற்றது. அதிலும் இராஜாங்க அமைச்சர் கலந்து கொண்டதுடன், மரக்கன்று ஒன்றினையும் நாட்டினார்.

இந் நிகழ்வுகளில் கிழக்கு மாகாண தபால் திணைக்கள பிரதி தபால்மா அதிபர் திருமதி.ஜெயானந்தி அவர்களும், தபால் திணைக்கள உயரதிகாரிகளும் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.