உலகில் சக்தி வாய்ந்த 100 நபர்களின் பட்டியலில் உள்ள இந்தியர்கள்!

உலகில் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு வாய்ந்த 100 பேரின் பட்டியலை TIME இதழ் வெளியிட்டுள்ளது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை வைத்து இந்தப் பட்டியல் தயார் செய்யபடுகிறது. பிரதமர் மோடி, பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உள்ளிட்டோர் இதில் இடம்பிடித்துள்ளனர். இதுமட்டுமல்லாமல், சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க மருத்துவ வல்லுநர் அந்தோணி ஃபாஸி உள்ளிட்டோரும் இடம்பிடித்துள்ளனர்.